Tag: சரவாக்
சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட் 19 பாதிப்பு
சரவாக் மாநிலத்தின் சாரிகெய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வோங் லிங் பியூ கொவிட் 19 நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவை அமைப்பது குறித்து எதுவும் பிரதமரிடம் பேசவில்லை!- அபாங் ஜொஹாரி
மத்திய அமைச்சரவை அமைப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்ததாகக் கூறப்படுவதை அபாங் ஜொஹாரி ஓபெங் மறுத்தார்.
ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும் மகாதீர் அணிக்கு ஆதரவு
தன்னை ஆதரிக்கும் 114 மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை மகாதீர் வெளியிட்ட பின்னர், மகாதீரை ஆதரிக்கவில்லை என்று கூறிய சரவாக் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும அவரையே ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
சரவாக்கில் ஜசெக, ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க தயார்!
வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தேசிய நலன் என்ற பெயரில் ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க சரவாக் ஜசெக தயாராக உள்ளதாக சரவாக் ஜசெக தலைவர் சோங் சியென் ஜென் தெரிவித்துள்ளார்.
யாருக்கு ஆதரவு? சரவாக் கட்சிகள் மார்ச் 1-ஆம் தேதி முடிவு செய்கின்றன!
கூச்சிங் - அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசின் என இரு தரப்புகளும் அடுத்த ஆட்சியை அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற சரவாக் கூட்டணிக்...
சரவாக்கின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவு
செவ்வாய்க்கிழமை மாமன்னரைச் சந்தித்த காபுங்கான் பார்ட்டி சரவாக்கின் அனைத்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகாதீர் பிரதமராக நீடிக்கத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.
சரவாக் தலைவர்களுடன் நஜிப் இரகசிய சந்திப்பு
சபா, சரவாக் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து, ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஓர் இரகசிய இடத்தில் சரவாக் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஜூட் சட்டமன்றம்: இடைத்தேர்தல் நடைபெறாது!
புஜூட் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சன்னின் தகுதியை இரத்து செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாது என்று சரவாக் மாநில சட்டமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.
ஜசெகவைச் சேர்ந்த புஜூட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தகுதி இழப்பு!
புஜூட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தியோங் சன்னின் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை கூட்டரசு நீதிமன்றம் இரத்து செய்தது.
மில்லியன் கணக்கான ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா கலந்து கொள்ளவில்லை!
தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு விசாரனையின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை, ரோஸ்மா மன்சோர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.