Home நாடு சங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்படி நடவடிக்கை – பழனிவேல் எச்சரிக்கை

சங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்படி நடவடிக்கை – பழனிவேல் எச்சரிக்கை

609
0
SHARE
Ad

palanivel540px_540_361_100கோலாலம்பூர், பிப்ரவரி 14 – மஇகா தேர்தல் குறித்து விடுத்துள்ள உத்தரவுகளை திரும்பப் பெறவில்லை என்றால் சங்கங்களின் பதிவிலாகாவை சட்டப்படி நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை விடுத்த பழனிவேல், வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்குள் சங்கங்களின் பதிவிலாகா தனது உத்தரவுகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார்.

மேலும், நேற்று சங்கங்களின் பதிவிலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்ற மஇகா இடைக்கால மத்திய செயலவைக் கூட்டம் ‘சட்டவிரோதமானது’ என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice