Home நாடு பெர்சாத்து: ராட்சி ஜிடின், ரோனால்ட் கியாண்டி, அகமட் பைசால் அசுமு – 3 உதவித் தலைவர்களாகத்...

பெர்சாத்து: ராட்சி ஜிடின், ரோனால்ட் கியாண்டி, அகமட் பைசால் அசுமு – 3 உதவித் தலைவர்களாகத் தேர்வு

189
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில், துணைத் தலைவராக டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3 உதவித் தலைவர்களாக ராட்சி ஜிடின், ரோனால்ட் கியாண்டி, அகமட் பைசால் அசுமு ஆகியோர் தேர்வு பெற்றனர்.

நிரந்தரத் தலைவராக சுகைமி அப்துல்லாவும் நிரந்தரத் துணைத் தலைவராக ஹானாபியா ஹம்சாவும் தேர்வு பெற்றனர்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் மற்றொரு முக்கிய முகமாகப் பார்க்கப்படும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி தகுதி இல்லாததால் எந்தப் பொறுப்புக்கும் போட்டியிடவில்லை. அவர் கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கட்சியில் வலுவான ஆதரவுத் தளம் கொண்டவராக அஸ்மின் அலி பார்க்கப்படுகிறார். பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹில்மான், அஸ்மின் அலியின் தீவிர ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார்.

20 பேர் கொண்ட மத்திய செயலவைக்குக் கீழ்க்காணும் முக்கியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

  1. இக்மால் ஹிஷாம் அப்துல் அசிஸ்
  2. சைனோல் பாட்சில் பஹாருடின்
  3. வான் சைபுல் வான் ஜான்
  4. தவுபிக் யாக்கோப்
  5. வான் அகமட் பைசால் வான் அகமட் கமால்
  6. ஹானிபா அபு பாக்கர்
  7. அஃபான் ஜூமாஹாட்
  8. டாக்டர் ஷாருடின் ஜமால்
  9. டாக்டர் யாட்சில் யாக்கோப்
  10. சைபுடின் அப்துல்லா
  11. ரோசோல் வாஹிட்
  12. பாரிட் சவாவி
  13. டாக்டர் அஃபிப் பஹாருடின்
  14. அபு பாக்கார் ஹம்சா
  15. யாசிட் யூனுஸ்
  16. சுல்கிப்ளி பூஜாங்
  17. யூனுஸ் நூர்டின்
  18. லிம் திங் காய் (சபா)
  19. அஸ்மாவி ஹாருண்
  20. யாட்சான் முகமட்

வெற்றி பெற்ற உச்ச மன்ற உறுப்பினர்களில் பலர் முன்பு பெர்சாத்து அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தபோது அமைச்சர்களாக – துணையமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் ஆவர்.

சபாவைச் சேர்ந்த ஒரே ஒரு சீனர் மட்டும் உச்சமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

பெர்சாத்து கட்சியின் தேர்தல் முடிவுகள் மூலம், முஹிடினுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஹம்சா சைனுடினே ஏற்பார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கும் அஸ்மின் அலிக்கும் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளராக அஸ்மின் அலியே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.