Home நாடு ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!

ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!

174
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியில் குதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தனது கட்சி மற்றும் அமைச்சரவைப் பதவிகளில் இருந்து விலகி, கட்சியைப் பலப்படுத்த அடிமட்டப் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது விடுமுறையின்போது, அவர் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும், பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலையும் சந்தித்ததாக ரபிஸி கூறினார்.

“டத்தோஸ்ரீ அன்வாருடனான எனது கலந்துரையாடலின் போது, 16வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சார உத்தி தற்போதைய பொதுமக்கள் நிலைமைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டேன்,” என்று ரபிசி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தற்போதைய அரசாங்கப் பிரச்சாரம் தங்களைத் தற்காக்கும் பாவனையில் இருக்கிறது. மாறாக, பிகேஆர் எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்ததைப் போல் தாக்குதல் நிலையில் இல்லாததும் எனது கவலையாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர் தனது கட்சியைத் தற்காத்து அமைச்சரவையில் தொடர வேண்டும் என்று இரு தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்ததாக ரபிசி குறிப்பிட்டார்.

பொருளாதார அமைச்சரான அவர், பிகேஆர் தேசிய நிலையிலான தேர்தல்களில் தனது பதவியைப் தற்காக்கப் போவதாகவும், மற்றவர்கள் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

ஒளிமயமான எதிர்காலத்திற்கான திறமைகளை வளர்க்க வேண்டும்

“கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியை நான் வரவேற்கிறேன், மேலும் கட்சியை வலுப்படுத்த மற்ற வேட்பாளர்களுடன் இணைந்து களத்தில் இறங்குவேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், துணைத் தலைவராக கட்சித் தலைமையிலும், அரசாங்கத்தின் மூலமாகவும் தொடர்ந்து பங்காற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.

ரபிசியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவரை எதிர்த்து சைபுடின் நசுத்தியோன் போட்டியிடுவாரா? அல்லது நூருல் இசா களத்தில் குதிப்பாரா? என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.