Home நாடு அசாம் பாக்கி பதவி நீட்டிப்பை நூருல் இசா எதிர்த்தார்!

அசாம் பாக்கி பதவி நீட்டிப்பை நூருல் இசா எதிர்த்தார்!

75
0
SHARE
Ad
நூருல் இசா

கோலாலம்பூர்: தனது தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டியிருப்பதை வரவேற்கவில்லை என நூருல் இசா தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்காக நூருல் இசா போட்டியிடுகிறார்.

காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசாங்க ஊழியர்கள் துணிச்சலுடன் எழ வேண்டும் என்றும் நூருல் அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“இந்த பதவி நீட்டிப்பை நாம் வரவேற்க முடியாது. ஏற்கவும் முடியாது. பிகேஆர் சீர்திருத்தங்களுக்காகப் போராட வேண்டிய கட்சி. இதற்காக, நமது கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற வேண்டும். துணிச்சலான அரசாங்க ஊழியர்களும், பிரமுகர்களும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழ வேண்டும்” என தனது எக்ஸ் தளத்தில் நூருல் பதிவிட்டார்.

அசாம் பாக்கிக்கு 3-வது முறையாக பதவி நீட்டிப்பை பிரதமர் அன்வார் இப்ராகிம் வழங்கியிருக்கிறார். அசாம் பாக்கி மீது பல்வேறு சர்ச்சைகளுக்குரிய புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

ஒற்றுமையையும் சீர்திருத்தங்களையும் சமன்படுத்தும் வகையில் சிறந்த முடிவுகளை எடுக்க தான் உறுதி பூண்டுள்ளதாக நூருல் ஏற்கனவே அறைகூவல் விடுத்திருந்தார்.

நூருலுக்கு எதிராக வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், தனது தந்தை பிரதமராக எடுத்திருக்கும் ஒரு முடிவை பகிரங்கமாக நூருல் சாடியிருப்பது இதுவே முதன் முறையாகும்.