Home நாடு ரிசா அசிஸ் மீது 2-வது நாளாக விசாரணை

ரிசா அசிஸ் மீது 2-வது நாளாக விசாரணை

1312
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நஜிப் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் மகனான ரிசா அசிஸ் இன்று புதன்கிழமை (ஜூலை 4) இரண்டாவது நாளாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

நேற்று செவ்வாய்க்கிழமையும் ரிசா அசிஸ் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்து 1எம்டிபி தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

நஜிப் இன்று காலையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ரிசா அசிஸ் மீதான விசாரணை ஊழல் தடுப்பு ஆணையத்தில் தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) என்ற ஆங்கில படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

இந்த நிறுவனம்தான் ‘தெ வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தை, லியார்னாடோ டி காப்பிரோவைக் கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தது.

1எம்டிபியில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் ரெட் கிரானைட் நிறுவனம் ஆங்கிலப் படத் தயாரிப்பில் முதலீடு செய்தது என்பதுதான் ரிசா அசிஸ் மீதான விசாரணைக்கான அடிப்படையாகும்.