Home நாடு “பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா

“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா

1360
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தாலும், தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என வான் அசிசா அறிவித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு தொடர்ந்து பணியாற்ற தேவையிருப்பதாகத் தான் உணர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனினும் அன்வார் இப்ராகிம் 2007 முதல்  வகித்து வரும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் என்ற பதவியைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்ற முடிவை பிகேஆர் கட்சி இன்னும் எடுக்கவில்லை என்றும் வான் அசிசா கூறினார்.

இதற்கிடையில் இதே விவகாரம் குறித்துக் கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ‘பொதுத் தலைவர்’ பதவி வேண்டுமா இல்லையா என்பதை கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும் என்றார். 2007-ஆம் ஆண்டு வாக்கில் அன்வார் கட்சிப் பொறுப்பு எதனையும் வகிக்க முடியாது என்ற நிலைமை எழுந்தபோது, பிகேஆர் பொதுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது வான் அசிசா மற்றும் அன்வார் இருவருமே கட்சியின் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் என்பதால் இனியும் ‘பொதுத் தலைவர்’ பதவி தேவையில்லை என அஸ்மின் அலி கருத்துத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வான் அசிசா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் துணைப் பிரதமர் என்ற முறையில் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த பின்னரும் தொடர்ந்து முக்கிய கடமைகளை ஆற்றிவர வேண்டும், கட்சியில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என்றும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.