Home நாடு கேமரன் மலை அடுத்து, செமினியிலும் பாஸ் விலகிக் கொள்கிறது!

கேமரன் மலை அடுத்து, செமினியிலும் பாஸ் விலகிக் கொள்கிறது!

805
0
SHARE
Ad

ஷா அலாம்: கேமரன் மலை இடைத் தேர்தலை அடுத்து, பாஸ் கட்சி செமினி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தகியுடின் ஹசாண் கூறினார்.

நேற்று (புதன்கிழமை), பாஸ் கட்சியின் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி, தேர்தல் இயந்திரங்களை தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயல்படும்” என தகியுடின் கூறினார்.

தேர்தல் ஆணையம், நாளை (வெள்ளிக்கிழமை), செமினி சட்டமன்றத்தில் நடைபெற இருக்கும், இடைத் தேர்தல் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பக்தியார் முகமட் மாரடைப்புக் காரணமாக காலமானதைத் தொடர்ந்து, இப்பகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.