Home நாடு “இனிய நண்பரை இழந்து விட்டேன்” சரவணனின் கண்ணீர் அஞ்சலி

“இனிய நண்பரை இழந்து விட்டேன்” சரவணனின் கண்ணீர் அஞ்சலி

1089
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்கக் குரலோன் வே.தங்கமணி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் இனிய நண்பரை இழந்து விட்தாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“தங்கக்குரலோன் தங்கமணி காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். கலையுலகிலும், இலக்கியத் துறையிலும் என்னோடு ஏறத்தாழ 30 ஆண்டுகள் பயணித்த நண்பர். இந்த நாட்டில் கண்ணதாசன் விழா, கம்பன் விழா மற்றும் நான் ஏற்பாடு செய்த அத்தனை இலக்கிய விழாக்களுக்கும், எனக்கு முதுகெலும்பாக இருந்து பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிகள் புரிந்த சிறந்த கலைஞன்” என சரவணன் தங்கமணியின் பங்களிப்புக்கு புகழாரம் சூட்டினார்.

“மென்மையான மனிதர், திறமையான கலைஞர், இனிய நண்பர் இப்படிப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவரைக் காலன் அழைத்துக் கொண்டது ஆறாத துயரம். அன்னாரின் இழப்பு கலையுலகிலும், இலக்கிய உலகிலும் பேரிழப்பு. ஈடு செய்ய முடியாத தங்கக் குரலோனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும், கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் சரவணன் தனது செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தனிப்பட்ட முறையில் தனது இனிய நண்பர் ஒருவரை இழந்து விட்டதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.