Home நாடு சரவாக் : 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜசெக

சரவாக் : 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜசெக

497
0
SHARE
Ad

கூச்சிங் : 15-வது பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியில் குதிக்கிறது. கடந்த முறை 9 தொகுதிகளில் ஜசெக போட்டியிட்டது.

பண்டார் கூச்சிங், ஸ்டாம்பின், மாஸ் காடிங், சிபு, லானாங், சாரிகேய் ஆகிய தொகுதிகளை மீண்டும் தற்காக்க ஜசெக முனைந்துள்ளது. செரியான், பிந்துலு ஆகிய தொகுதிகளில் ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்துக் களமிறங்குகிறது ஜசெக.

ஸ்டாம்பின் தொகுதியில் சோங் போட்டியிடுவார். ஸ்டாம்பின் தொகுதியில் மோர்டி பிஹோல், மாஸ் காடிங் தொகுதியில் கெல்வின் யீ போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

செரியான் தொகுதியில் லேரி ஜாபோல் என்ற புதுமுகம் ஜசெக சார்பில் போட்டியிடுகிறார்.

காப்பிட் தொகுதியில் ஜசெக கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை காப்பிட் தொகுதியை ஜசெக, பிகேஆர் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது.

இந்தத் தொகுதியில் மத்திய அமைச்சர் அலெக்சாண்டனர் நந்தா லிங்கி கடந்த 2018-இல் வெற்றி பெற்றார்.

சரவாக் 32 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகும். நாட்டிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக சரவாக் திகழ்கிறது.