புதுடெல்லி, ஜூன் 25 – மதுபானங்களின் தரம், அதில் கலக்கப்படும் மதுபான அளவு ஆகியவை குறித்து நிர்ணயம் செய்ய, வரைவு திட்ட அறிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தயார் செய்து வருகிறது.
இதை, அடுத்த 2 மாதங்களில் வெளியிடும் எனத் தெரிகிறது. இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது:
“அனைத்து வகை மதுபானங்கள், அது சார்ந்த பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு, மக்கள் கருத்து கேட்கப்பட்டு வருகிறது”.
“அடுத்த 2 மாதங்களில் இப்பணி முடிந்து முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டும். இதன்படி பீர், பிராந்தி உள்ளிட்ட அனைத்து மதுபானங்களும் தரக்கட்டுப்பாட்டின் கீழ்வரும்”.
“இதற்கான தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய ஆலோசனைக்குழு கூடி, தனது அறிக்கையை அளித்துள்ளது. மது பானங்களுக்கான தரம் குறித்த தெளிவாக அறிக்கை உறுதிசெய்யப்பட்டவுடன், அது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். மேலும், கலால்வரித் துறையினரிடமும் அந்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்” என அவர் கூறினார்.