Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

1எம்டிபி: கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய நஜிப் மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி!

1எம்டிபி உடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் பொருட்களை ஆய்வு செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது!”- நஜிப்

ஈராயிரத்து பதினான்கு மற்றும் ஈராயிரத்து பதினைந்துக்கு இடையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டதாக நஜிப் துன் ரசாக் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்!

1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.

1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது!”- சாட்சி

1எம்டிபி குறித்த இறுதி தணிக்கை அறிக்கையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அனுமதியின்றி அச்சிட முடியாது என்று முன்னாள் தணிக்கை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்

நஜிப் துன் ரசாக் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருப்பதில் தவறேதும் இல்லை என்றும் முன்பு நஜிப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்றும் துன் மகாதீர் கூறினார்.

எம்ஏசிசியிடமிருந்து புகார் அறிக்கை பெறப்பட்டது, ஆயின், உரையாடல்கள் பதிவு கிடைக்கவில்லை!- காவல் துறை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து புகார் அறிக்கை பெறப்பட்டதாகவும், ஆயினும், உரையாடல்கள் பதிவுகள் கிடைக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜோ லோவுடன் தொடர்பில் இருந்ததாக நஜிப் ஒப்புதல்!

தமது அம்பேங்க் தனிப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாடுகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.

“லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்

நஜிப் துன் ரசாக், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதற்கு ராம் கர்பால் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“எம்ஏசிசி நீதிமன்றமாக உருமாறிவிட்டதா?!”- நஜிப்

எம்ஏசிசி வெளியிட்ட ஒன்பது உரையாடல்கள் பதிவுகள் குறித்து 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பி உள்ளார்.

“லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருகிறோம்!”- முகமட் ஷாபி

லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருவதகா நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி தெரிவித்துள்ளார்.