Tag: துன் மகாதீர் முகமட்
பிப்ரவரி 21 முடிவு என்னவாக இருந்தாலும் ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் பதவி விலகுவது உறுதி...
பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் பிரதமர் பதவிப் பரிமாற்றம் குறித்த முடிவு என்னவாக இருந்தாலும், ஏபெக் மாநாட்டுக்குப் பின்னர் தான் பதவி விலகுவது உறுதி என துன் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்!”-...
வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கான போராட்டத்தில், குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களின் பங்கு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?
துன் மகாதீரே முழுத் தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
“பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்
டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு "நாட்டைக் காப்பாற்றுவதை" நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது வெறும் கட்டுக்கதை என்று லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை!”- மகாதீர்
தாம் பிரதமர் பதவியில் நிலைத்திருப்பது குறித்து எந்தவொரு குறிப்பிட்ட கட்சி இயக்கத்திலும் அல்லது நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தினார்.
138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன?
நூறுக்கும் மேற்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட்-19: இக்கட்டான நிலையில் சீனா, மலேசியா உறவில் பாதிப்பில்லை!
கொவிட்-பத்தொன்பது நோய்தொற்று குறித்து சின அதிபர் ஜின்பெங் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தொலைபேசி உரையாடலை நடத்தியதாக சிசிடிவி தெரிவித்துள்ளது.
மகாதீர், அன்வார் சந்திப்பு – பதவிப் பரிமாற்றம் அடுத்த வாரத்தில் முடிவு
மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் குறித்து பல்வேறு ஆரூடங்களும், ஐயப்பாடுகளும் நிலவி வரும் நிலையில் வியாழக்கிழமையன்று மகாதீரை அவரது அலுவலகத்தில் அன்வார் இப்ராகிம் சந்தித்தார்.
“மகாதீர் பிரதமராக நீடித்திருக்க சாஹிட் ஹமீடி பலருடன் பேச்சுவார்த்தை!”- லோக்மான்
டாக்டர் மகாதீர் முகமட்டுடன், சாஹிட் ஹமீடி ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஒலிநாடாவை வெளியிட்டது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.
“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது!”- வான் அசிசா
மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.