Home உலகம் பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!

பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!

725
0
SHARE
Ad

David Cameronஇலண்டன், மே 25 – ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது தொடர்பான விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் சில, வாக்கெடுப்பில் பிரிட்டனில் குடியேறியுள்ள பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பிரிட்டனில் குடியேறியுள்ள சுமார் 1.5 மில்லியன் ஐரோப்பிய மக்கள் வாக்களிக்க அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரிட்டனின் எதிர்காலத்தை வெளிநாட்டு அகதிகள் தீர்மானிக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறினால், அது அகதிகளின் வாழ்க்கை முறையை பாதிக்கும் என்பதால், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருப்பதையே விரும்புவார்கள். இதனால், அவர்களின் வாக்கெடுப்பும் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவாகவே இருக்கும். பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிக்க பிரிட்டன் நாட்டு குடிமக்களுக்கு தான் உரிமை உள்ளது” எனக் கூறினார் கேமரூன்.

இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் பிரதமரின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். மேலும், பிரிட்டன் குடிமக்களில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான விரிவான தகவல் எதிர்வரும் புதன்கிழமை அன்று ராணி இரண்டாம் எலிசபெத் வழங்கவுள்ள உரையில் இடம்பெறும் என பிரிட்டன் அரசு வட்டாரத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.