Home நாடு 3 மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கம் – 3 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்

3 மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கம் – 3 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்

444
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடுமையான பிரச்சாரங்களுக்கு இடையில் நடைபெற்ற 6 மாநிலத் தேர்தல்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கே சாதகமாக முடிந்திருக்கின்றன.

எனினும், ஏற்கனவே, தாங்கள் ஆட்சி செய்து வந்த மாநிலங்களான கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களை மட்டுமே மீண்டும் பெரிக்காத்தான் தற்காத்துக் கொள்ள முடிந்தது.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற முடிந்தாலும் அதனால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இந்த மாநிலங்களை தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாரப்பான் இணைந்த கூட்டணி – ஒற்றுமை அரசாங்கம் – மீண்டும் கைப்பற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு, சிலாங்கூரில் பக்காத்தான் ஹாரப்பான் தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமையும் பெரும்பான்மையும் கொண்டிருக்கிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் தனித்துப் பெரும்பான்மை பெற இயலவில்லை. எனினும் தேசிய முன்னணியோடு இணைந்தால் பெரும்பான்மை கொண்டிருக்கும் – ஆட்சி அமைக்கவும் முடியும்.