Home நாடு பினாங்கு : சுந்தரராஜூ, வீட்டு வசதி, சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்

பினாங்கு : சுந்தரராஜூ, வீட்டு வசதி, சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்

638
0
SHARE
Ad
பிறை ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜூ சோமு

ஜோர்ஜ் டவுன் : பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து எதிர்பார்த்தபடியே ஜசெக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் ஜக்டீப் சிங் டியோ துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். கடந்த 3 தவணைகளாக துணை முதலமைச்சராக இருந்த இராமசாமிக்கு இந்த முறை போட்டியிட ஜசெக வாய்ப்பளிக்கவில்லை.

டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்டீப் சிங் மனிதவளம், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்பேற்பார்.

பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் முதலமைச்சர் சௌ கோன் இயோ தலைமையில் 10 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குப் பதவியேற்றனர். பினாங்கு ஆளுநர் அப்துல் ஃபூசி அப்துல் ரசாக் முன்னிலையில் அவர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

முதன் முறையாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்னோ சட்டமன்ற உறுப்பினர் ரஷிடி சினோல் பினாங்கு ஆட்சிக் குழுவில் இணைந்துள்ளார்.

மற்றொரு துணை முதல்வராக பிகேஆர் கட்சியின் பத்து மாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சிக் குழு உறுப்பினர்களில் 8 பேர் ஜசெகவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பிகேஆரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அம்னோவைச் சேர்ந்தவர்.

ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராக பிறை தொகுதியில் வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வீட்டு வசதி, சுற்றுச் சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது.

பிறை தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்னர் ஒரு பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சுந்தர்ராஜூ. அதனால் அந்தத் துறையின் நுணுக்கங்களை அறிந்தவர்.

 

டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான்

அம்னோவின் பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் ஆட்சிக் குழுவில் இடம் பெறவில்லை.

இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கில் வெற்றி பெற்றிருக்கின்றனர். ரீசல் மெரிக்கன் பெர்த்தாம் தொகுதியிலும், சுங்கை அச்சே சட்டமன்றத் தொகுதியில்  ரஷிடி ஜினோலும் வெற்றி பெற்றனர்.

100 விழுக்காடு வெற்றி பெற்ற ஜசெக

பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின் வெற்றிக்கும் துணை புரிந்திருக்கிறது.

மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 29 சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 13-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது தவணைக்கு சௌ கோன் இயோ முதலமைச்சராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.