Home நாடு கோபிந்த் சிங் – ராம் கர்ப்பால் சிங் சகோதரர்கள் வெற்றி! லிம் குவான் எங் தங்கை...

கோபிந்த் சிங் – ராம் கர்ப்பால் சிங் சகோதரர்கள் வெற்றி! லிம் குவான் எங் தங்கை தோல்வி!

97
0
SHARE
Ad
ஜசெக மாநாட்டில் கோபிந்த் சிங், லிம் குவான் எங், அந்தோணி லோக்…

ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் சில முரண்பட்ட தேர்தல் முடிவுகளும் வெளிப்பட்டன. குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் பிரச்சாரங்களில் மையமிட்டிருந்தாலும், மறைந்த கர்ப்பால் சிங்கின் இரண்டு புதல்வர்கள் கோபிந்த் சிங் டியோ – ராம்கர்ப்பால் சிங் – இருவரும் வெற்றி பெற்றனர்.

கோபிந்த் சிங் முதலாவதாக அதிக வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் அவரின் சகோதரர் ராம் கர்ப்பால் சிங் 1,917 வாக்குகள் பெற்று 30 பேர் கொண்ட மத்திய செயலவையில் 17-வது இடத்தைப் பிடித்தார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோபிந்த் சிங் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராம் கர்ப்பால் சிங் துணை தலைமைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். ஸ்டீவன் சிம், ஹான்னா இயோ ஆகிய இருவரும் நியமிக்கப்பட்ட மற்ற துணைத் தலைமைச் செயலாளர்களாவர்.

#TamilSchoolmychoice

அதே சமயத்தில் தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜசெக தலைவர் லிம் குவான் எங் வெற்றி பெற்றார். 1,719 வாக்குகள் பெற்று அவர் 30 பேர் கொண்ட மத்திய செயலவையில் 26-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஆனால், லிம் குவான் எங் சகோதரியும் துணை நிதியமைச்சருமான லிம் ஹூய் யிங் ஜசெக தேர்தலில் தோல்வி கண்டார். லிம் குவான் எங்கிற்கு எதிரான பிரச்சாரங்களில் லிம் ஹூய் யிங் மையப் புள்ளியாகத் திகழ்ந்தார். அடுத்த பினாங்கு முதலமைச்சராக வர முயற்சி செய்கிறார் என்ற குறைகூறல் அவர் மீது எழுந்தன. துணை நிதியமைச்சராகவும் அவரின் செயல்பாடுகளில் அதிருப்திகள் நிலவின.

ஒருபுறம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மத்திய செயலவைக்கு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மற்றொரு புறத்தில் லிம் கிட் சியாங் குடும்பத்திலிருந்து இருவர் போட்டியிட்டாலும் அதில் ஒருவர் மட்டுமே வென்றிருக்கும் முரண்பாடு நேற்றை ஜசெக தேர்தலில் வெளிப்பட்டது.